அர்ஜுன் கட்டும் ஆஞ்சநேயர் கோவில்
சென்னை கெருகம்பாக்கத்தில் பிரமாண்டமான
ஆஞ்ச நேயர் கோவில் ஒன்றைக் கட்டிவருகிறார் நடிகர் அர்ஜுன். சுமார் 35 அடி
உயரத்தில், 140 டன் எடை கொண்ட பீடத்துடன் கூடிய ஆஞ்ச நேயர் சிலை
வடிவமைக்கப்பட்டு இன்று காலை 8 மணி அளவில் சுமார் 100 தொழிலாளர்களின்
துணையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டவர் என்கிற
பெருமையுடன் தியான நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்ச நேயர் என்கிற
பெருமையையும் அர்ஜுனின் ஆஞ்சநேயர் பெறுகிறார்.
“அனைத்து பக்தர்களையும் பெரிதும் கவர்ந்த
தியான ரூபத்தில் இன்று ஸ்ரீ ராம பக்த அனுமன் சிலை பிரதிஷ்டை
செய்யப்படுகிறது. தொடர்ந்து ஆலயப்பணிகள் சிறப்பாக நிறைவேற்றப் பட்டு…
ஓராண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்” என்று அர்ஜுன் தெரிவித்தார்.
1 comments:
ஆஞ்சநேய பக்தர்களுக்கு இந்த இடம் மிகப்பெரிய வரபிரசாதமாக இருக்கும்.
அன்பு நன்றிகள்...இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எல்லா நலன்களும் தர வேண்டுகிறேன்.
இம்முறை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக இந்த ஆஞ்சநேயரை தரிசிக்கவேண்டும்....
Post a Comment